சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

Photo of author

By Parthipan K

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்ள அவருக்கு வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கையை கொலிஜியம் குழு நிராகரித்தால், அதிருப்தி தெரிவித்து தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, மூத்த நீதிபதி கோத்தாரி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் அமரேஸ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சாஹியை புதிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.