சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிமுக மீது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறது.திமுகவின் இந்த செயலை கண்டித்து நேற்றைய தினம் அதிமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் மற்றும் திமுக மீது அவதூறு பரப்பியதாக அதிமுக பிரமுகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து இருக்கின்ற நொச்சிக்குளம் கிராமத்தைச் சார்ந்தவர் தென்னரசு இவர் அதிமுகவில் ஒன்றிய விவசாய அணி செயலாளராக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமூக வலைதள பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக சார்பாக பல கருத்துக்களை பதிவிட இவர் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறு பரப்பும் விதத்திலும், ஆபாசமான வார்த்தைகளிலும், பதிவுகளை வெளியிட்டதாக திமுகவை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், திமுக தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாகவும், ஆபாசமாக பதிவிட்டு வந்ததாக சைபர்கிரைம் காவல்துறையினருக்கு அனேக புகார்கள் சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காலநிலையை காவல்துறையினர் தென்னரசு மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து இருக்கிறார்கள்.