ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

Photo of author

By Parthipan K

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

Parthipan K

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 21ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது.

இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் சில தளர்வுகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (11.05.2020) முதல் 34 வகையான கடைகள் செயல்படத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு:

  • தேநீர்க்கடைகள் (பார்சல் மட்டும்)
  • அடுமனைகள் (பார்சல் மட்டும்)
  • உணவகங்கள் (பார்சல் மட்டும்)
  • பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள்
  • கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள்
  • சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
  • மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • அலைப்பேசி விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
  • மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  • சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
  • சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
  • மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
  • தொலைக்காட்சி விற்பனை மற்றும் தொலைக்காட்சி பழுது நீக்கும் கடைகள்
  • பெட்டிக் கடைகள்
  • பர்னிச்சர் கடைகள்
  • சாலையோர தள்ளுவண்டிக் கடைகள்
  • உலர் சலவையகங்கள்
  • கூரியர் மற்றும் பார்சல் சேவை
  • லாரி புக்கிங் சர்வீஸ்
  • ஜெராக்ஸ் கடைகள்
  • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
  • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
  • நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  • விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
  • டைல்ஸ் கடைகள்
  • பெயிண்ட் கடைகள்
  • எலக்ட்ரிகல் கடைகள்
  • ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் விற்பனை கடைகள்
  • நர்சரி கார்டன்கள்
  • மரக்கட்டைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
  • மரம் அறுக்கும் கடைகள்
  • முடிதிருத்தகங்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
  • ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் தொடரலாம், கடைகள் தொடர்ந்து இயங்கலாம்.

மேலும், கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வரும் காலங்களில் பல்வேறு பணிகள் மற்றும் கடைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.