தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு அவர் பதவியில் இருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து நேற்று தினம் காலை முதல் அவருடைய வேளச்சேரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இது தொடர்பாக சோதனை நடைபெற்றது. அத்துடன் சேலத்தில் இருக்கின்ற அவருக்கு சொந்தமான வீடுகள் உட்பட ஐந்து இடங்களில் சோதனை நடந்தது.
எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக நடந்த இந்த சோதனையை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டம் 1988 இன் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக இருந்த சமயத்தில் அதோடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக கடந்த 2017 மற்றும் 18 உள்ளிட்ட காலகட்டங்களில் இருந்த சமயத்தில் அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு செப் 27ம் தேதிமுதல் தற்போது வரையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சமயத்தில் வெங்கடாஜலம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்றையதினம் அவருக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்றது 13.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 6.5 கிலோ தங்கம் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு வழக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது இதனையடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
அத்தோடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாஜலம் அவர்களின் வீட்டில் சுமார் 10 கிலோ சந்தனம் மரத்திலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. வெங்கடாஜலம் இன்னும் மூன்று தினங்களில் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.