திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

Photo of author

By Hasini

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

Hasini

TNPL cricket stopped by rain when Tirupur Tamils ​​suffocated!

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

கிரிக்கெட் என்றால் தொட்டில் குழந்தை முதல் பல்லு போன தாத்தா வரை அனைவரும் விரும்பும் நிலையில், அதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மக்களை மகிழ்விக்கின்றனர். T20, பிரீமியர் லீக், ஐ.பி.எல், டெஸ்ட் மேட்ச் என வகைப்படுத்தப்பட்டு, தனி தனியாக விளையாடி வருகின்றனர். அதில் சிலர் ரன்னிங் கம்மென்ட்ரி செய்வதிலும், கை தேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பலருக்கு அந்த கம்மென்ட்ரி  பிடித்தும் கிரிக்கெட் பார்த்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில், உள்ள எம்.எஸ் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஐந்தாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ்ம் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கேப்டன் கவுசிக் காந்தி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் தமிழன் சூப்பர் லீக், பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 16.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.