சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார்.

0
143

சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார்.

தமிழகம் முழுவதும் பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து அரசுப் போட்டித் தேர்வுக்காக
தயாராகி வருகின்றனர். இவர்கள்
அனைவரின் கோபத்திற்கு காரணமானவர் தான் இந்த இடைத்தரகர் ஜெயக்குமார்.

ஊழல்,இலஞ்சம்,சொத்துக் குவிப்பு என்ற வார்த்தைகள் சமீப காலமாக தமிழக மக்களுக்கு பழகிப்போன வார்த்தைகளாகி வருகின்றன. பணம் இருந்தால் சிறையில் கூட சொகுசாக இருக்கலாம் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து தற்போது சில வாரங்களுக்கு முன்பு தமிழக இளைஞர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையத்தில் நடைபெற்ற ஊழல்.அதில் முக்கிய குற்றவாளியாக உள்ளவர் இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்பு இவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சொகுசான வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசில் சாதாரன இளநிலை உதவியாளர் முதல் இன்றைக்கு துணை ஆட்சியராக உள்ள பலரும் இவரின் உதவியால் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.அவர்களின் ஆதரவால் தான் இத்தகைய சொகுசான ஒரு வாழ்க்கையை சிறையிலும் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

நாட்டுக் கோழிக்கறி குழம்பு, டீ , காஃபி என நினைத்து நினைத்த நேரத்தில் சிறைத்துறை சமையல் அறையில் இருந்து செல்கிறதாம். இதையெல்லாம் பார்த்து நேர்மையான சிறைத்துறை அதிகாரிகள் புலம்பித் தள்ளுகிறார்கள்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய முறை கழிவறைக்கு பதிலாக வெஸ்டர்ன் முறை கழிவறை கூட மாற்றித் தரப்பட்டுள்ளதாம்.

இது குறித்து சிறைத்துறை எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறெல்லாம் யாருக்கும் எந்த சலுகையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Previous articleஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??
Next articleஉங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்