TNPSC GROUP 2 & 2A 2024: நோட் பண்ணிக்கோங்க.. 2030 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!!

0
161
TNPSC GROUP 2 & 2A 2024: NOTE.. Exam Date Released for 2030 Vacancies!!
TNPSC GROUP 2 & 2A 2024: NOTE.. Exam Date Released for 2030 Vacancies!!

TNPSC GROUP 2 & 2A 2024: நோட் பண்ணிக்கோங்க.. 2030 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,நன்னடத்தை அதிகாரி,தொழிலாளர் உதவி ஆய்வாளர்,சிறப்பு உதவியாளர்,சிறப்பு கிளை உதவியாளர்,நகராட்சி ஆணையர்,உதவி பிரிவு அலுவலர்,கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்,வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 2,2A என்ற தேர்வுகளை செப்டம்பர் 14 அன்று நடத்த இருக்கிறது.

ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் குரூப் 2,2A தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த ஜூன் 09 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய நிலையில் செப்டெம்பர் மாதம் 14 அன்று நடைபெற உள்ள குரூப் 2,2A தேர்வு மீதான ஆர்வம் தேர்வர்களிடையே அதிகரித்திருக்கிறது.

குரூப் 2,2A குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.குரூப் 2,2Aவிற்கு இன்று(ஜூன் 20) முதல் விண்ணப்பம் செய்யலாம் என்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூலை 19 இறுதி நாள் என்றும் தெரிவித்திருக்கிறது.

மேலும் வருகின்ற செப்டம்பர் 14 ஆம் தேதி குரூப் 2,2A நடைபெறும் என்றும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறது.

மேலும் விண்ணப்பிக்க உள்ள நபர்கள் இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெற https://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.