TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Photo of author

By Parthipan K

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Parthipan K

Important Information for Group One Written Students! Interview results published!

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான   வேலைவாய்ப்புகள்  அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை  அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது.

மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் எட்டு லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இந்த தேர்வை எழுதியுள்ளார்கள். மே மாதம் 21ஆம் தேதி மாநில முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு  அதில் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை இந்த தேர்வானது நடத்தப்பட்டது.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அந்த மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. மேலும் இம்மாதம் இறுதியில் டிஎன்பிசி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையத்தின் உத்தேச தேர்வு முடிவு  அட்டவணையை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி அன்று கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.