TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!!

Photo of author

By Divya

TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!!

தமிழகத்தில் அரசுப் போட்டி தேர்வுகளில் பங்குபெற பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நிரந்தர வேலை,ஊதிய உயர்வு,பென்ஷன் என்று ஒருவரின் வாழ்க்கையே அரசுவேலை மாற்றி விடுகிறது.தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் TNPSC போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1,குரூப் 2&2A,குரூப் 3,குரூப் 4 என்று குரூப் 8 வரை தேர்வு நடத்தி கட் ஆப் மதிப்பெண் மூலம் தேர்வர்களை பணியமர்த்தி வருகிறது.கடந்த ஜூன் 09 அன்று குரூப் 4 மற்றும் ஜூலை 13 அன்று குரூப் 1 தேர்வுகள் நடைபெற்றதுஇவ்விரண்டு தேர்வுகளிலும் லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் அடுத்து வருகின்ற செப்டம்பர் மாதம் 14 அன்று குரூப் 2 & 2A தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வாணையம் தெரிவித்திருந்தது.அதறகான காலக்கெடு முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2327 காலிப்பணியிடங்களுக்கு 7,90,376 பேர் போட்டியிடுகின்றனர்.இதனால் குரூப் 2 & 2A கடுமையான போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.அரசாங்க வேலை என்றாலே ஒரு கௌரம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருந்து வரும் நிலையில் சில பதவிகள் அதிக பவர் நிறைந்தவையாக இருக்கும்.இதுபோன்ற பதவிகளுக்கு அரசாங்க கார் கிடைக்கும்.அதேபோல் சில பதவிகளுக்கு ரூ.50,000 மேல் ஊதியம் கிடைக்கும்.செப்டம்பர் 14 அன்று இந்நிலையில் நடைபெற உள்ள குரூப் 2&2A தேர்விற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றவர்கள் விண்ணப்பபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.