TNPSC GROUP 4 EXAM: தேர்வர்களுக்கு அலார்ட்.. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நவடிக்கை!! 

0
222
TNPSC GROUP 4 EXAM: Alert to Candidates.. Violation of these rules will result in severe penalties!!
TNPSC GROUP 4 EXAM: Alert to Candidates.. Violation of these rules will result in severe penalties!!

TNPSC GROUP 4 EXAM: தேர்வர்களுக்கு அலார்ட்.. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நவடிக்கை!!

தமிழகத்தில் நாளை(ஜூன் 09) TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது.குரூப் 4 தேர்வு வாயிலாக கிராம நிர்வாக அலுவலர்,தட்டச்சர்,இளநிலை உதவியாளர்,வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்ப உள்ளது.

முதல் பகுதியில்100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழித் தேர்வு நடைபெறுகிறது.இரண்டாம் பகுதியில் 75 பொது அறிவு கேள்விகள் மற்றும் 25 திறனறி கேள்விகள் கேட்கப்படுகிறது.இந்நிலையில் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்:

1)ஜூன் 09 காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வருகை தந்திருக்க வேண்டும்.9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

2)தேர்வர்கள் ஹால் டிக்கெட்,ஆதார் அட்டை,பாஸ்போர்ட்,ஓட்டுநர் உரிமம்,பான் கார்டு,வாக்காளர் அட்டை ஆகியவற்றின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும்.

3)தேர்வறையின் இருக்கையில் உள்ள பெயர்,பதிவு எண் மற்றும் புகைப்படம் ஆகியவை சரிபார்த்த பிறகே தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும்.

4)காலை 9 மணிக்கு OMR விடைத்தாள் வழங்கப்பட்டு விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.

5) OMR விடைத்தாளில் தேர்வு எழுதுவதற்கு முன்னர் மற்றும் தேர்விற்கு பின்னர் தேர்வர்கள் கையெழுத்திட வேண்டும்.

6)குரூப் 4 தேர்வர்கள் தேர்வை கருப்பு நிற பந்துமுனைப் பேனாவை பயன்படுத்தி மட்டுமே தேர்வெழுத வேண்டும்.

7)தேர்வர்களுக்கு பிற்பகல் 12.45 முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதி இல்லை.

8)ஒருவேளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் உங்களின் புகைப்படம் மிஸ்ஸானால் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை வெள்ளைத் தாளில் ஒட்டி பெயர்,முகவரி மாற்றும் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும்.

9)தேர்வறைக்குள் மொபைல்,வாட்ச்,மோதிரம்,புத்தகங்கள்,கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.

10)தேர்வறைக்குள் ஆள்மாறாட்டம் செய்தாலோ,தேர்வுக் கூடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே முறைகேட்டில் ஈடுபட்டாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.