டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.
தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் தேர்வை குரூப் 4 தேர்வு இதில் சில ஆண்டுகளுக்கு முன் விஏஓ பதிவுகளுக்கான தேர்வு சேர்த்து நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த தேர்வை எழுதலாம் எனவும் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் சொந்த மாவட்டத்திற்கு உள்ளேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது தற்போது ஏழு விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது அவை இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கு எழுத்து தட்டச்சர் , கிராம நிர்வாக அலுவலர் ,வரிதண்டவர் ,நில அளவுல, வரைவாளர் போன்ற பதவிகளை பெறுவதற்காக இந்த குரூப்-4 தேர்வு எழுதுகின்றார்கள்.
மேலும் குரூப் 4 தேர்வில் நடைபெறும் எழுத்து தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.
இந்தத் தேர்விற்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அட்மிட் கார்டு 2022 இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குரூப் 4 தேர்வின் ஹால் டிக்கெட் இந்த வாரம் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் 2022 தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.