TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது உதவியாளர்,வருவாய் கோட்டாசியர்,வட்டாச்சியர்,துணை ஆட்சியர்,நகராட்சி ஆணையர்,துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மை அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் குரூப் 4 தேர்விற்க்கான அறிவிப்பு வெளியானது.கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,கள சர்வேயர்,வரைவளர்,தட்டச்சர்,ஸ்டெனோ தட்டாளர்,பில் கலக்டெர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய குரூப் 4 தேர்விற்கு தேர்வு எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில் தேர்விற்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்ற ஏதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது.இந்நிலையில் குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்விற்கான ஹால் டிக்கெட் ஜூன் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஜூன் 4 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் TNPSC தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது.

TNPSC ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து எப்படி?

ஸ்டெப் 01:

www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 02:

TNPSC CCSE-IV ஹால் டிக்கெட் 2024 என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 03:

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள் நுழைய வேண்டும்.

ஸ்டெப் 04:

TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 என்ற பக்கத்தில் உள்ள ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்