புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

0
129
#image_title

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. அந்த அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் ஆணையம் தான் டி.என்.பி.எஸ்.சி ஆணையம். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தேர்வில் குளறுபடி, தேர்வில் முறைகேடு என பல்வேறு பழிச்சொல்லு ஆளாகியுள்ளது. இதனை போக்கும்வகையில் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தனி கமிட்டி அமைத்து ஆலோசனை நடத்தியது.

முடிவில் முதன்மைத் தேர்விலும் நேர்காணலிலும் வெளிப்படை தன்மையை அதிகரிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக நேர்காணலின் தான் முறைகேடு அதிகம் நடைபெறுவதாகவும் சிலர் குறுக்கு வழியில் சென்று வேலையை பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை போக்கும் வகையில் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி ஆணையம் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேர்முகத் தேர்வுகளுக்கு (வாய்மொழி தேர்வு) அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த தேதி நிழற்படம், உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை A,B,C,D முதலான, எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் (நேர்காணல் நடத்தும் குழு) அனுமதிக்கப்படுவர். இந்த புதிய நடைமுறையை பின்பற்றினால் தேர்தர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தின் மீது நம்பிக்கை தனிமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் முதல்நிலை தேர்வு விரைவில் நடத்தி அதன் பிறகு நடைபெறும் முதன்மைத் தேர்வை விரைவில் நடத்தி, அதற்கான முடிவுகளையும் விரைவில் அறிவிக்க வேண்டும் என தேர்வர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதை டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Previous articleதனியாக ஆபாச வீடியோ பார்ப்பதில் தவறு கிடையாது!!! கேரளா உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு!!!
Next articleநல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!