இந்திய குடிமகன் அனைவரும் வரி என்பதை கட்டாயம் செலுத்த வேண்டும். அதில் நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள் என தொடங்கி அனைத்திற்கும் அது பொருந்தும். அந்த வகையில் எந்த விதிகளை மீறினால் அபராதம், வரி ஏய்ப்பு என்பது பலருக்கும் தெரியாது. குறைந்தபட்சமாக ஒரு நபர் ஒரு நாளில் இரண்டு லட்சம் மட்டுமே ரொக்கமாக வங்கிகளிலிருந்து பெற முடியும். இதனை மீறி பணம் பெறும் பட்சத்தில் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல தொழில் சார்ந்த தேவைகளுக்கு நீங்கள் செலுத்தப்படும் பணமானது பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக செலுத்த முடியாது. அது வரி செலுத்தும் கணக்கிலும் பொருந்தாது. அது உங்களின் வருமானத்தின் கீழ் உள்ள கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் ஒரு நபரிடமிருந்து 25,000 மேல் ரொக்கமாக கடன் பெறக் கூடாது அதுவும் பிரிவு 269ss மற்றும் 269டி படி குற்றமாகும்.
அத்தோடு ஐம்பதாயிரத்திற்கு மேல் வங்கியில் பணம் செலுத்த வேண்டுமென்றாலும் கட்டாயம் பான் எண் என்பது அவசியம். அதேபோல ஒரு சொத்து வாங்க வேண்டும் என்றால் அதன் அனைத்து பரிவர்த்தனையும் வங்கி மூலம் தான் எடுத்துக் கொள்ள முடியும், அதற்கென்று ரொக்கமாக கையில் பெறுவது 2 லட்சம் வரை மட்டுமே என்ற வரைமுறை உள்ளது. இவையெல்லாம் அடிப்படை வரி சம்பந்தப்பட்ட தகவல்கள், இதனை மீறி செயல்படும் பட்சத்தில் கட்டாயம் அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.