கோடை காலத்தில் வியர்க்குரு கொப்பளம் அதிகமாக வருவது பொதுவான விஷயம்தான்.இந்த வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.தினமும் குளிப்பதற்கு முன் இதை செய்து வந்தால் உடலில் வியர்க்குரு கொப்பளங்கள் வாராமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)சந்தனம் – ஒரு துண்டு
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)பன்னீர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு துண்டு சந்தனத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைக்க வேண்டும்.இந்த வேப்பிலை பேஸ்ட் மற்றும் சந்தன பேஸ்ட்டை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இப்பொழுது தயாரித்து வைத்துள்ள கலவையை உடல் முழுவதும் பூசி காய வைத்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளங்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – ஒரு கப்
2)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பேஸ்டை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.இந்த கலவையை உடல் முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளம் வராமல் இருக்கும்.