குறைந்த முதலீட்டில் கை நிறைய லாபம் பெற.. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீமில் இன்வெஸ்ட் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

குறைந்த முதலீட்டில் கை நிறைய லாபம் பெற.. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீமில் இன்வெஸ்ட் பண்ணுங்க!!

Rupa

To get a lot of profit with less investment.. Invest in this scheme of Post Office!!

மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும்,முதலீட்டை பெருக்கவும் மத்திய அரசானது போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதோடு,முதலீட்டு பணத்திற்கு நூறு சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆப்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

குறைந்தது ரூ.500 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்கி கை நிறைய லாபம் பார்க்கலாம்.வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பாத்திரம் என்று ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.இதில் மூன்று முக்கிய திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி(PPF):

இது 15 ஆண்டுகால சேமிப்பு திட்டமாகும்.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.முதிர்வு காலம் முடிந்த பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்(SSY):

இது பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும்.இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும்.இதில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.பெண் குழந்தையின் 21 வயதிற்கு பிறகு முதிர்வு தொகை வழங்கப்படும்.

தொடர் வைப்பு நிதி(RD)

இது ஐந்தாண்டு கால சேமிப்பு திட்டமாகும்.போஸ்ட் ஆபிஸில் இருக்கின்ற திட்டங்களில் மிகச் சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக தொடர் வைப்பு நிதி செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட தொகையை மாத மாதம் RD கணக்கில் செலுத்தி வந்தால் ஐந்தாண்டுகள் நிறைந்தவடைந்த பின்னர் முதிர்வு தொகை கிடைக்கும்.இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.