பால் போன்ற வெண்மை நிற பற்களை பெற.. இந்த மூலிகை பல் பொடியை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

நம் பற்களில் மஞ்சள் கறைகள் தென்பட்டால் அவை நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.பல் மஞ்சள் கறையால் சிரிக்க மற்றும் பேசு தயக்கம் ஏற்படும்.இதனால் நாளடைவில் தன்னம்பிக்கை தானாக குறைந்துவிடும்.

எனவே இயற்கையான முறையில் பற்களில் காணப்படும் மஞ்சள் கறையை போக்க மஞ்சள்,கொய்யா இலை,வேப்பிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பற்பொடி தயாரித்து பல் துலக்குங்கள்.

தேவைப்படும் பொருட்கள் பட்டியல்:

1)பேக்கிங் சோடா பவுடர் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் கிழங்கு பவுடர் – அரை தேக்கரண்டி
3)கொய்யா இலை பவுடர் – ஒரு தேக்கரண்டி
4)பூண்டு வற்றல் பொடி – ஒரு தேக்கரண்டி
5)வேப்பம்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
6)வாதநாராயணன் தண்டு பொடி – ஒரு தேக்கரண்டி
7)வேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்டி
8)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
9)கிராம்பு பொடி – ஒரு தேக்கரண்டி

முழு செய்முறை விளக்கம் இதோ:

**முதலில் ஒரு துண்டு உலர்ந்த மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு காய்ந்த கொய்யா இலை மற்றும் உலர் வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு வேப்பம் பட்டை மற்றும் வாத நாராயணன் தண்டை உலர்த்தி மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் பூண்டு வற்றல் மற்றும் கிராம்பை இதேபோல் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இறுதியாக கல் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக மிக்ஸ் செய்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி ஒன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஒரு ஒரு டப்பாவில் இந்த பொடியை கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பொடி தேவையான அளவு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து பற்களை துலக்கி வந்தால் பற்களில் காணப்படும் கறைகள் நீங்கிவிடும்.இந்த மூலிகை பற்பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.