நம் இந்தியாவில் வாஸ்து சாஸ்திர விதிகளை நம்பி ஏராளமானோர் அதை பின்பற்றுகின்றனர்.வாஸ்து பார்த்து வீட்டு கட்டினால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்பது இன்றுவரை நம்பப்படும் விஷயமாக இருக்கின்றது.
அதேபோல் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் கடன் பிரச்சனை,துக்கம் போன்றவை ஏற்படும்.அதேபோல் வீட்டு பூஜையை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.பண வரவை அதிகரிக்கும் பொருட்கள் இருக்க வேண்டும்.
குறிப்பாக பூஜை அறையில் பணவரவை அதிகரிக்கும் கடவுள் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்.இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வாஸ்துப்படி நீங்கள் வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்க வேண்டிய சிலைகள் லட்சுமி தேவி மற்றும் குபேரர் ஆகும்.எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை என்று வருந்துபவர்கள் வீட்டு பூஜை அறையில் இந்த இரண்டு சிலைகளை வைத்து வழிபட வேண்டும்.
செல்வத்தின் அடையாளமாக திகழும் லட்சுமி தேவியை தினந்தோறும் வழிபட்டு வந்தால் செல்வ செழிப்புடன் வாழ வழிபிறக்கும்.அதேபோல் செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.வாரந்தோறும் வியாழக்கிழமை நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரரை வழிபட்டு வந்தால் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.இந்த இரண்டு சிலைகளையும் பூஜை அறையின் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து வழிபட வேண்டும்.