முகத்தில் உள்ள மங்கு மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.
தீர்வு 01:
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து வெந்தய நீரை வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் வெந்தயத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அரைத்த வெந்தயப் பேஸ்டை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் மங்கு உள்ள பகுதியில் பூசி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி ஐந்து நிமிடங்கள் வரை நன்கு ஸ்க்ரப் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதுபோன்று தினமும் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு மாயமாகிவிடும்.
தீர்வு 02:
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பசுந்தயிர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து பாதி எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து தயிரில் மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் மங்கு தானாக மறைந்துவிடும்.
தீர்வு 03:
1)நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
நல்ல தரமான பெரிய நெல்லிக்காய் இரண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் மங்கு தானாக மறையும்.
தீர்வு 04:
1)குப்பைமேனி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்னடி
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை முகத்தில் தடவினால் மங்கு தானாக மறைந்துவிடும்.
தீர்வு 05:
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)முல்தானி மெட்டி – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி சுத்தம் செய்தால் சில தினங்களில் மங்கு மறைந்துவிடும்.