ஆண்களுக்கு மீசை தாடி தான் அழகு.ஆனால் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் தென்பட்டால் அவை முக அழகை கெடுத்துவிடும்.முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற நிறைய பெண்கள் ஷேவ் செய்கிறார்கள்.இதனால் எந்த பயனும் இல்லை.சொல்லப்போனால் பாதிப்பு தான் அதிகமாகும்.ஆனால் கீழே சொல்லப்பட்டுள்ளபடி செய்தால் முகத்தில் உள்ள முடிகள் அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)காபி தூள் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
4)தயிர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:-
இதற்கு முதலில் பசும் பாலில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட தயிர் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு காய்ந்த மஞ்சள் கிழங்கை இடித்து தூளாக்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு காபி தூள் எடுத்து கிண்ணத்தில் கொட்டி கொள்ளுங்கள்.எந்தவகை பிராண்டாக இருந்தாலும் பரவாயில்லை.பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள கெட்டி தயிர் ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் இடித்த மஞ்சள் கிழங்கு பொடி சேர்த்து நன்கு க்ரீமியாகும் வரை கலக்கவும்.
பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி காட்டன் துணி கொண்டு துடைக்கவும்.அடுத்து டால்கம் பவுடர் சிறிதளவு முகத்தில் அப்ளை செய்யவும்.இதையடுத்து தயார் செய்து வைத்துள்ள க்ரீமை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு நன்கு காயவிடுங்கள்.
பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி காட்டன் துணியில் துடைக்கவும்.இதற்கு அடுத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் முகத்தில் அப்ளை செய்யவும்.இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கி சருமம் மிருதுவாக இருக்கும்.