முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)உளுந்து பருப்பு – 50 கிராம்
2)வசம்பு – ஒரு துண்டு
3)குப்பைமேனி இலை – கால் கப்
4)மஞ்சள் பொடி – இரண்டு தேக்கரண்டி
5)அம்மான் பச்சரிசி இலை – ஒரு கைப்பிடி
செய்முறை விளக்கம்:-
முதலில் 50 கிராம் உளுந்து பருப்பை நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு துண்டு வசம்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு நன்கு காயவைத்த குப்பைமேனி இலையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு கைப்பிடி காய்ந்த அம்மான் பச்சரிசி இலையையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பொடிகளுடன் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.20 நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)உளுந்து பருப்பு – 25 கிராம்
2)பாசிப்பருப்பு – 25 கிராம்
3)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
4)வேப்பிலை(உலர்த்தியது) – கால் கப்
செய்முறை விளக்கம்:-
உளுந்து பருப்பு,பாசிப்பருப்பு ஆகியவற்றை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உலர்த்திய வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இவைகளை ஒன்றாக கலந்து டப்பாவில் கொட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:-
இந்த பவுடர் தேவையான அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் சுருக்கங்கள் நீங்கும்.