அழகு தேவதை போல் ஜொலிக்க.. இந்த ஆயிலை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்!! நைட் ட்ரை பண்ணினால் மார்னிங் ரிசல்ட் கன்பார்ம்!

Photo of author

By Divya

அழகு தேவதை போல் ஜொலிக்க.. இந்த ஆயிலை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்!! நைட் ட்ரை பண்ணினால் மார்னிங் ரிசல்ட் கன்பார்ம்!

Divya

To glow like a beauty angel.. apply this oil on your face!! If you do a night dry, the morning result will be confirmed!

அழகு தேவதை போல் ஜொலிக்க.. இந்த ஆயிலை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்!! நைட் ட்ரை பண்ணினால் மார்னிங் ரிசல்ட் கன்பார்ம்!

இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் முகத்தை பராமரிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது.இதனால் சருமம் படு மோசமான விளைவுகளை சந்திக்கிறது.நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள சிரமப்பட தேவையில்லை.இதற்காக விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டியதில்லை.சருமத்தை பொலிவாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை பின்பற்றி வந்தாலே போதுமானது.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)தேங்காய் எண்ணெய்
3)வைட்டமின் ஈ மாத்திரை

செய்முறை:-

10 கிராம் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பாதாம் பவுடரை அதில் கொட்டி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும்.

அதன் பின்னர் இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு வடிகட்டவும்.பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் போட்டு கலந்தால் முகத்தை பொலிவாக்கும் மேஜிக் ஆயில் தயார்.

இந்த ஆயிலை இரவில் முகம் முழுவதும் அப்ளை செய்து காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து வந்தால் டெட் செல்கள்,சரும சுருக்கம்,வறட்சி,கரும் புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)ஆலிவ் ஆயில்
2)கற்றாழை ஜெல்
3)வேப்பிலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு கொத்து வேப்பிலை போட்டு மிதமான தீயில் காய்ச்சி ஆறவிட்டு முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் கரும் புள்ளிகள்,சரும சுருக்கம்,வறட்சி நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.