வெறும் மூன்று வாரத்தில் தலைமுடி இடுப்பு வரை வளர.. இந்த மூன்று கொண்ட எண்ணெயை அப்ளை பண்ணுங்க!!

0
142

தலையில் புதியதாக முடி வளர முடியை அடர்த்தியாக வைக்க தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காய சாறு மற்றும் பன்னீர் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம்.இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தலை முடியை ஆரோக்கியமாக வளர வைக்க உதவும்.இந்த எண்ணெயை தொடர்ந்து 21 நாட்கள் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)சின்ன வெங்காயம் – 10
2)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
3)பன்னீர் வாட்டர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

படி 01:

சின்ன வெங்காயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டக் கூடிய ஒரு பொருளாகும்.முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

படி 02:

பிறகு அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி அளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

படி 03:

தேங்காய் எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய சாறை அதில் ஊற்றி கலந்துவிடுங்கள்.

படி 04:

தேங்காய் எண்ணெய் மற்றும் சின்ன வெங்காய சாறு நன்கு மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை நன்கு ஆறவிடுங்கள்.

படி 05:

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.ரோஸ் வாட்டர் இல்லாதவர்கள் பன்னீர் ரோஜா இதழை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு இந்த எண்ணெய் கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

படி 06:

இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்கால்ப்பில் படும்படி ஸ்ப்ரே செய்து மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் தேங்காய் எண்ணெய் தயாரித்து தொடர்ந்து மூன்று வாரம் பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலையில் புதிய முடி நிறைய வளர்வதை நீங்களே கண்கூட காண்பீர்கள்.

Previous articleபைல்ஸ் கடைசி கட்டத்தில் இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த ஒரு விதையை ஊறவைத்து சாப்பிடுங்க போதும்!!
Next articleபாலியல் ஆர்வம் அதிகரிக்க.. நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட இந்த வயாகரா பழத்தை சாப்பிடுங்கள்!!