Chennai: தேசிய பத்திரிகையாளர் நாளாக நவம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக முதலமைச்சர் உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையாளர் நாளாக நவம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட ஆண்டு 1996 -ஆம் ஆண்டு ஆகும். பத்திரிகையாளர்கள் உண்மை சம்பவத்தை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என இரவு, பகல் என ஓயாமல் உழைகின்றன. ஒரு நாட்டில் என்ன நிகழ்வது என உண்மையை மட்டும் கூறும் நோக்கில் ஒரு சிறந்த பணியை செய்கின்றன.
பத்திரிகை துறை யாருக்கும் அஞ்சாமல் தனது கடமையை பின் பற்றி உண்மைகளை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்கிறது. அது மட்டும் அல்லாமல் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பத்திரிகை ஊடகம் போற்றப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தல பக்கத்தில் தேசிய பத்திரிகை தினத்தில் உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். உண்மைக்கான பயணத்தில் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம்.
மேலும் சகிப்பு தன்மையற்ற பத்திரிகையாளர்களின் தைரியமே இந்த ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. அச்சம் இன்றி பத்திரிகை துறை செழிக்க வேண்டும் மற்றும் நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களை பாதுகாக்க நாம் உறுதியாக நிற்போம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் ஜனநாயகம் காட்டி காக்க போராடும் ஊடகத்தின் சேவையை பாராட்ட இந்த தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.