நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் தடைபடுதல் போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உணர்த்துகிறது.
அதேபோல் கண்திருஷ்டி இருந்தால் வீட்டில் கெட்ட விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சம் இருக்காது.இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும்.
எனவே வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற,நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வசம்பை மந்திர பொருளாக பயன்படுத்தலாம்.வசம்பு ஒரு மூலிகை பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.இந்த வசம்பு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த வசம்பு ஒரு கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும்.
கொடிய விஷத்தையும் எளிதில் முறித்து தள்ளும் ஆற்றல் வசம்பிடம் உள்ளது.இந்த வசம்பு குழந்தைகளின் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாக திகழ்கிறது.வசம்பை நெருப்பில் வாட்டி பொடித்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சரி செய்கிறது.
இப்படி பல அம்சங்களை கொண்டிருக்கும் வசம்பை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.வீட்டு பூஜை அறையில் வசம்பு வைத்து வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.
வசம்பு துண்டை பன்னீரில் நினைத்து மஞ்சள்,குங்குமம் வைத்து பூஜை அறையில் இருக்கின்ற லட்சுமி தேவி படத்திற்கு அருகில் இதை வைக்க வேண்டும்.தினமும் இந்த வசம்பு துண்டிற்கு பூஜை செய்து வழிபட்டால் பண விரையம் ஆவது கட்டுப்படும்.