உங்கள் சமையலறை அடுப்பை சுத்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
தீர்வு 01:
எலுமிச்சம் பழம் – ஒன்று
தண்ணீர் – சிறிதளவு
ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும்.
பிறகு ஒரு காட்டன் துணியை அதில் போட்டு நினைத்து கேஸ் அடுப்பு மற்றும் பர்னரை க்ளீன் செய்ய வேண்டும்.இதுபோன்று வாரம் ஒன்று அல்லது இருமுறை செய்தால் கேஸ் அடுப்பு சுத்தமாக இருக்கும்.
தீர்வு 02:
ஈனோ பவுடர் – ஒரு பாக்கட்
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை தோல் – ஒன்று
அடுப்பில் ஈனோ பவுடரை தூவிவிட்டு எலுமிச்சை சாறை பிழிந்துவிட வேண்டும்.இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவைத்த பிறகு எலுமிச்சை தோல் கொண்டு அடுப்பு மாற்றும் பர்னரை தேய்க்க வேண்டும்.இப்படி செய்வதால் எண்ணெய் பிசுக்கு,குழம்பு கறை,அழுக்குகள் அனைத்தும் நீங்கி பளிச்சிடும்.
தீர்வு 03:
சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் – ஒன்று
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சோடா உப்பு தூவி அடுப்பு மற்றும் பர்னரை தேய்க்க வேண்டும்.இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் அடுப்பு புதிது போன்று பளிச்சென்று மாறும்.
தீர்வு 04:
வினிகர் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் காட்டன் துணியை அதில் போட்டு ஊறவைத்து அடுப்பு மற்றும் பர்னரை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி அடிக்கடி செய்து வந்தால் அடுப்பு கறை படியாமல் இருக்கும்.