ஒரு வாரத்தில் “மங்கு” மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஒரு வாரத்தில் “மங்கு” மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

Divya

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றான மங்குவை மறைய வைக்க இந்த பயனுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வடித்த கஞ்சி – 50 மில்லி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
3)பசு வெண்ணெய் – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் 25 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 50 மில்லி அளவு வடித்து ஆறவைத்த கஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கஞ்சியில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

இதை மங்கு மீது தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் மங்கு பிரச்சனை சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)திப்பிலி – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 10 கிராம் அளவிற்கு திப்பிலி எடுத்துக் கொள்ளுங்கள்.திப்பிலி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த திப்பிலியை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஆறவைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த திப்பிலி பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மங்கு மீது பூசுங்கள்.இரண்டு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

இந்த ரெமிடியை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முயற்சித்து வந்தால் மங்கு பாதிப்பு தானாக மறைந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கப்
2)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – ஒன்று
3)குப்பைமேனி இலை – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் வேப்பிலை மற்றும் குப்பைமேனி இலையை சொல்லிய அளவுப்படி எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த பவுடரை டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த பொடி தேவையான அளவு போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு தண்ணீர் சிறிதளவு சேர்த்து குழைத்து மங்கு மீது தடவி சுத்தம் செய்து வந்தால் சீக்கிரம் மறைந்துவிடும்.