முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய வைக்க.. இது ஒன்று போதுமே!!

Photo of author

By Divya

சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் பருக்கள் உடைந்து கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது.இதனால் சருமம் அழகு மற்றும் பொலிவை இழந்து காணத் தொடங்கும்.இந்த கரும்புள்ளிகளை பாதிப்பில்லாமல் மறைய வைக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்.

வீட்டு வைத்தியம் 01:

1)உருளைக்கிழங்கு
2)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.உருளைக்கிழங்கு சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு வைட்டமின் ஈ மாத்திரை கலந்து கரும் புள்ளிகள் மீது அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

வீட்டு வைத்தியம் 02:

1)கற்றாழை
2)எலுமிச்சை ஜூஸ்

ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சருமத்தில் தடவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் கரும் புள்ளிகளை எளிதில் மறைய வைக்க முடியும்.

வீட்டு வைத்தியம் 03:

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)சந்தனப் பொடி

25 கிராம் சந்தனப் பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகம் முழுவதும் அப்ளை செய்து வந்தால் கரும் புள்ளிகள் முழுமையாக மறைந்துவிடும்.