முடி அடர் கருப்பாக வளர.. இந்த இலையை தேங்காயில் எண்ணெய் ஊறவைத்து தேயுங்கள்!!

0
32

உங்கள் வெள்ளை முடியை அடர் கருப்பாக மாற்ற தேங்காய் எண்ணையில் வெப்பாலை ஊறவைத்து பயன்படுத்துங்கள்.ஹேர் டை பயன்படுத்துவதைவிட இந்த ஹேர் ஆயில் தலைமுடியை சீக்கிரம் கருப்பாக மாற்றுவதோடு தலைமுடியை வளர வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வெப்பாலை இலை – 10

செய்முறை விளக்கம்:-

முதலில் மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 250 மில்லி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எண்ணையை ஈரம் இல்லாத ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் வெப்பாலை இலைகளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி ஒரு வாரம் வரை ஊறவிடுங்கள்.தேங்காய் எண்ணெய் நிறம் மாறி வரும் வரை ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு எண்ணையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.இந்த எண்ணையை தலைக்கு அப்ளை பண்ணிட்டு வந்தால் தலையில் இருக்கின்ற வெள்ளை முடி நாளடைவில் கருமையாக மாறும்.

வெப்பாலை எண்ணெய் பயன்கள்:-

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெப்பாலை எண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.வெப்பாலை எண்ணெய் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

தலை அரிப்பு இருப்பவர்கள் இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.அதேபோல் வெப்பாலை எண்ணெய் பொடுகு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

வெப்பாலை எண்ணெய் தேமல்,சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.சருமத்தில் அழுக்குகள் படியாமல் இருக்க வெப்பாலை எண்ணையை பயன்படுத்தலாம்.வெப்பாலை எண்ணெய் படர் தாமரை,தோல் அரிப்பு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.

Previous articleசுருண்ட நரம்புகள் நேராக.. இந்த இரண்டு வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்!!
Next articleபாலில் இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால்.. உடலுறவில் முழு சுகத்தை அனுபவிக்கலாம்!!