ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

Photo of author

By Savitha

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

Savitha

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரானை!!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல்ராஜ், கடந்த மாதம் 29ம் தேதி துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வைப்பு தொகை, முதலீடு என முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனமானது 2438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையானது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய இயக்குநர்களில் ஹரீஷ், பாஸ்கர், மோகன்பாபு செந்தில்குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சிமுத்து, ராஜா, ஐயப்பன், மாலதி, இடைத்தரகர் ரூசோ அதன் நிர்வாகிகள் என இதுவரை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர்,ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மைக்கேல்ராஜ்,
7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அவரிடம், விசாரணையை தீவிர படுத்தி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் மூலம் வெளி நாட்டில் ஏதேனும் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.