தலையில் சிக்கு வாடை வீசாமல் இருக்க.. எண்ணெய் பசை குறைய இந்த பேஸ்டை தடவி குளிங்க!!

0
19

உங்கள் தலையில் வீசும் சிக்கு வாடை,அழுக்கு,எண்ணெய் பசை அனைத்தும் நீங்கி தலை முடி பளபளப்பாக மாற இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு கப் புதினா தழை
2)இரண்டு தேக்கரண்டி தயிர்
3)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் புதினா தழைகளை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த புதினா விழுதை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி தயிரை அதில் ஊற்றி கலக்குங்கள்.அதன் பிறகு எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்து நன்கு கலக்க வேண்டும்.

இதனை தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உங்கள் தலையில் இருக்கின்ற எண்ணெய் பசை,அழுக்கு,பொடுகு,வியர்வை வாசனை அனைத்தும் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு கைப்பிடி புதினா இலை
2)இரண்டு தேக்கரண்டி கடலை மாவு

செய்முறை விளக்கம்:-

புதினா இலைகளை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதனை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

இதை கிண்ணம் ஒன்றில் கொட்டி இரண்டு தேக்கரண்டி கடலை மாவு போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு இந்த கலவையை தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் தலையில் சிக்கு வாடை வராமல் இருக்கும்.

Previous articleஇது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!
Next articleவீட்டில் பல்லி கரப்பான் பூச்சி நடமாட்டம் ஸ்டாப் ஆக இதை ஒரு இரவு செய்யுங்கள்!!