உங்கள் தலையில் இருக்கின்ற வெள்ளைமுடியை கருமையாக மாற்ற இந்த பானத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
3)மஞ்சள் துண்டு – சிறிய பீஸ்
4)புதினா இலைகள் – ஐந்து
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் ஐந்து புதினா இலைகள் மற்றும் ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து மஞ்சள் துண்டு மற்றும் ஐந்து புதினா இலைகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.
ஸ்டெப் 05:
இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பானத்தை தினமும் காலை நேரத்தில் பருக வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 தினங்கள் காலை நேரத்தில் இந்த ஜூஸ் குடித்து வந்தால் வெள்ளைமுடி பிரச்சனையை வாழ்நாளில் சந்திக்க மாட்டீர்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் இரண்டு கொத்து கறிவேப்பிலை எடுத்து தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜாரில் கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் வெள்ளை முடி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.