கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

0
192
#image_title

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக வேதனை.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ளது மறைக்கான்சாவடி கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு, அது சட்டமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

இதனிடையே மறைக்கான்சாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்ட மறுநாளிலிருந்து இதுநாள் வரை தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிதண்ணீர் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளான மரைக்கான்சாவடி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது தண்ணீர் இன்றி தவிப்புக்கு ஆளாகியுள்ள தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கூறிய அவர்கள், கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராமத்தில் திறந்து வைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க

தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கோடை காலத்தில் தண்ணீர் இன்றி தவிக்கும் மரைக்கான்சாவடி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி குடிதண்ணீர் வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Previous articleகுப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!
Next article1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!