நிலப்பிரச்சனை தீர.. சொந்தமாக நிலம் வாங்க சிவனை இப்படி வழிபடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

மண் மற்றும் பொன்னில் போட்ட பணம் வீணாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப வீட்டு மனை,நிலங்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இன்று நகர்புறங்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலையை கேட்டால் தலைசுற்றும் அளவிற்கு அதன் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.இதனால் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது.

சிலருக்கு சொந்த நிலம் இருந்தும் எதுவும் செய்ய முடியாத அளவு பிரச்சனையில் இருக்கும்.பல ஆண்டுகள் கடந்தும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என்பது பலரின் குமுறலாக இருக்கின்றது.இப்படி சொந்தமாக நிலம் வாங்க முடியாதவர்கள்,நிலப் பிரச்சனை இருப்பவர்கள் சிவனை வழிபட்டு வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

பிரதோஷ நாளில் சிவ பெருமான் கோயிலுக்கு சென்று நார்த்தங்காயை அபிஷேக பொருளாக கொடுத்தால் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டுமென்ற கனவு விரைவில் நனவாகும். அதேபோல் வெண் தாமைரையை அர்ச்சனை பொருளாக சிவனுக்கு கொடுப்பதால் நிலப் பிரச்சனை தீரும்.

அதேபோல் வாரந்தோறும் வரக் கூடிய திங்கட் கிழமை அன்று சிவ பெருமானை வழிபட்டு வந்தால் சொந்த வீடு வாங்க வழி பிறக்கும்.சிவன் கோயிலுக்கு இலுப்பை எண்ணையை தானமாக கொடுப்பதன் மூலம் நீண்ட கால நிலப் பிரச்சனை நீங்கும்.அதேபோல் விபூதி,நல்லெண்ணெய்,விளக்கு,திரி உள்ளிட்ட பொருட்களை கோயிலுக்கு தானமாக கொடுத்து சிவனை வழிபட்டு வந்தால் நிலம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

அதேபோல் கார்த்திகை,மிருகசீரிஷம்,பூசம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வரக்கூடிய நாளில் சிவனை வழிபாடு செய்தால் சொந்தமாக நிலம் வாங்க வேண்டுமென்ற கனவு நனவாகும்.இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி ருத்ராட்சங்களை போட்டுக் கொள்ளவும்.இந்த நீரை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.