உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

Photo of author

By Divya

மனித உடலில் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் வெளியேறும் வியர்வை அதிக துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த பொடியை உடலில் பூசி குளிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)கோரைக்கிழங்கு – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் கிழங்கு – 20 கிராம்
3)சந்தன கட்டை – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 20 கிராம் அளவிற்கு மஞ்சள் கிழங்கை காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதற்கு அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து காய வைத்த கோரைக்கிழங்கு மற்றும் மஞ்சள் கிழங்கை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதன் பிறகு ஒரு சந்தன கட்டையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.இந்த மூன்று பொடியையும் ஒன்றாக மிக்ஸ் செய்து டப்பாவில் போட்டு சேகரித்துக் கொள்ளவும்.இந்த பொடியை உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கோரைக்கிழங்கு – ஒரு கப்
2)வேப்பிலை – ஒரு கப்
3)வெட்டி வேர் – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு வேப்பிலை மற்றும் கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து ஒரு கைப்பிடி வெட்டி வேரை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கப்
2)மஞ்சள் கிழங்கு – இரண்டு துண்டு
3)கல் உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் வேப்பிலையை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து இரண்டு துண்டு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு கால் தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.

கெமிக்கல் சோப்பிற்கு பதில் இந்த குளியல் பொடியை பயன்படுத்தினால் வியர்வை துர்நாற்றம் நீங்குவதுடன் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.