டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

0
224
to-the-attention-of-those-who-passed-the-tet-first-paper-exam-notice-issued-by-the-teacher-selection-board
to-the-attention-of-those-who-passed-the-tet-first-paper-exam-notice-issued-by-the-teacher-selection-board

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

இலவச கட்டையாக் கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது.

அந்த தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அந்த வகையில் டெட் இரண்டாம் தாள் தேர்வை ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டாம் தாள் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு மாதிரி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை பெற வேண்டும் என்றால் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Previous articleபாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்!
Next articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!