கணவனை தோளில் தூக்கிச்சென்ற மனைவிக்கு அடி உதை! ம.பி-யில் நடந்த கொடுமை

Photo of author

By Parthipan K

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவியை பின்னாலிருந்து தடியால் தாக்கி கொடுமை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் வார இறுதியில் வேலை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் சென்று உள்ளனர்.

ஊருக்குச் சென்ற கணவன் தனது உறவினர்களிடமும், அப்பகுதி கிராம மக்களிடமும் எனது மனைவி வேலைக்குச் செல்லும் இடத்தில் மற்றொரு ஆணுடன் நட்பில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிராம மக்கள் அந்தப் பெண்ணுக்கு தண்டனை தரவேண்டும் என முடிவு செய்தனர். ஆகவே அந்தப் பெண்ணை அழைத்து, சாலையில் உன்னுடைய கணவனை தோளில் சுமந்து செல்லுமாறு கூறி நடக்க வைத்துள்ளனர். நடந்து செல்கையில் பின்னாலிருந்து கிராம மக்கள் அந்தப் பெண்ணை தடி மற்றும் இதர பொருட்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். அந்த சம்பவ வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதில் அந்தப் பெண் தனது கணவரை தூக்கமுடியாமல் சிறிது தூரத்திலேயே நிலைதடுமாறி கீழே கீழ போகிறார், இருந்தாலும் அவர்கள் அந்தப் பெண்ணை தொடர்ந்து அடிக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் கணவன் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த வீடியோ லிங்க்: https://twitter.com/Anurag_Dwary/status/1288707679607816192?s=20