இந்த வெயில் காலத்தில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான்.வெயில் காலத்தில் வெளியில் சென்றால் சரும நிறம் மாறிவிடும்.எனவே சருமத்தை கலராக மாற்ற இங்குள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)கற்றாழை – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி தயிரை அதில் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்தால் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சென்று மாறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)தக்காளி – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தக்காளி பழத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த பேஸ்டை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளரிக்காய் – ஒன்று
2)காட்டன் பஞ்சு – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெள்ளரிக்காயை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
பிறகு வெள்ளரி ஜூஸை கிண்ணத்திற்கு பிழிந்து காட்டன் பஞ்சை அதில் வைத்து நினைத்து முகத்தில் தடவ வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.சருமத்திற்கு குளிர்ச்சி கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன்ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர்ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் முகக்கருமை நீங்கும்.