உங்கள் உதடுகள் பிங்க் நிறத்திற்கு மாற.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து பூசுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் உதடுகள் பிங்க் நிறத்திற்கு மாற.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து பூசுங்கள்!!

Divya

எல்லோருக்கும் அழகான பிங்க் நிறம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் கருப்பு நிற உதடுகளே பலருக்கும் இருக்கின்றது.உதடுகள் மீதுள்ள கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள லிப் பாம் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆமணக்கு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

சுத்தமான ஆமணக்கு எண்ணையை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு சிறிய பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை உதடுகள் மீது அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இந்த எண்ணையை உதட்டிற்கு அப்ளை செய்து வந்தால் கருமை நீங்கி பிங்க் நிறத்திற்கு உதடுகள் மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் வாணலி வைத்து கேரட் சாறை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.குறைவான தீயில் இதை
கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் உதட்டிற்கு பயன்படுத்தி வந்தால் கருமை நிறம் நீங்கும்.