இந்த கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக வெளியில் சென்று வந்தால் சரும நிறம் கருப்பாக மாறிவிடுகிறது.இந்த சருமப் பிரச்சனைகளில் இருந்து மீள தக்காளியை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1)தக்காளி
2)மஞ்சள் தூள்
3)எலுமிச்சை சாறு
செய்முறை விளக்கம்:-
முதலில் நன்கு கனிந்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும்.
அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை தக்காளி கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர்
2)மஞ்சள் தூள்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மிக்ஸ் செய்து சருமத்தில் தடவினால் தோல் பளபளப்பாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)பாசி பருப்பு பொடி
2)கற்றாழை ஜெல்
செய்முறை விளக்கம்:-
முதலில் பாசி பருப்பை பவுடர் பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பிரஸ் கற்றாழை ஜெல் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு குழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் வெயிலில் கருத்து போன சருமம் பொலிவாக மாறும்.