எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !

0
210
To whom does Corona belong in the house of Edappadi Palanisamy? Volunteers fear!
To whom does Corona belong in the house of Edappadi Palanisamy? Volunteers fear!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவி ராதா வீட்டிலேயே தன்னைதானே  தனிமைப்படுத்திக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மனைவியின் பெயர் ராதா.

இவர் இதுவரை ஊடகங்களில் படாமல் சற்று விலகியே வருகிறார் . சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவரது வாரிசுகள் கூட வெளியில் வரும்போது பாதுகாப்புடன் செல்வார்கள்.ஆனால் இடைப்படி பழனிச்சாமி அவர்களின் மனைவி எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து வருகிறார் .தான் எதிர்கசட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி என்பதை எந்தநேரத்திலும்  காட்டிகொள்ளாமல் இருப்பவர் தான் இவர். சாதாரணமாக எந்த இடத்துக்கும் தனியாகவே சென்று வருபவர்.

தன் கணவர் முதல்வராக இருந்தபோது கூட அதுகுறித்து எந்த வித பெரிய அளவில் காட்டிக் கொள்ளாத சாமானிய குடும்பத்தலைவியாகவே அவரது மனைவி இருந்துள்ளார். அரசியல் குறித்த விவகாரங்களில் அது தொடர்பான வேலைகளில் தலையிடாமல் சாதாரண குடும்பப் தலைவியாகவே அவர் செயல்பட்டு வருகிறார்.அவரது கணவர் எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் அரசியலில் சுற்றி வருவதால் வீடு மற்றும் விவசாய பணிகளை ராதா கவனித்துக் கொள்கிறார்.

இது ஒரு பக்கம் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தமிழகத்தில் வேகமாக படை எடுத்து வருகிறது. பல்வேறு மக்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட வைரஸ் தாக்கம் இருந்து கொண்டே தான் வருகிறது. எனவே மீண்டும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முயன்று கொண்டு வருகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரவி வருகிறது. ராதாவுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருப்பதால் அவர் வீட்டில் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.ஏற்கனவே இவருடைய உதவியாளர் உட்பட இருவருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது மனைவி ராதாவுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.விரைவில் குணமடைய அவரது கட்சி தொண்டர்கள் வேண்டிக்கொள்கின்றார்கள்.

author avatar
Parthipan K