தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

0
197

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இன்று மட்டும் 5,633 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 2,56,313 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 52,929 பேர் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 6-வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 993 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 71,575 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 34,32,025 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!
Next articleரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து போலியானவை – சுகாதார அமைச்சர் விளக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here