க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

Photo of author

By Parthipan K

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகை  ஜெனிலியா. தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்.

ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று இவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது கதாபாத்திரங்களின் பெயர்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வந்த ஜெனிலியா,

சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவரது பிறந்தநாளுக்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இவரது ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்