எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம்.
தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 அதிகரித்து ரூ.5420-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.368 அதிகரித்து ரூ.43360-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 ரூபாய் அதிகரித்து ரூ.5691 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.392 அதிகரித்து ரூ.45528-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராமிற்க்கு ரூ.2.60 அதிகரித்து 83.80-விற்க்கும், ஒரு கிலோ ரூ.83,800 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை நீடித்தால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது லட்சத்தை கடக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்து கொண்டே போவது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.