41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

Photo of author

By Pavithra

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

கடந்த 3 வாரமாக தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து 41 ஆயிரத்தை எட்டவிருந்தது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது.

அதாவது நேற்று டிசம்பர் 14 ஒரு கிராம் தங்கம் 5100-க்கும் ஒரு சவரன் தங்கம் 40800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5060 ரூபாய்க்கும்,ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 40480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்றே சரமாரியாக உயர்ந்த வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது.

அதாவது நேற்று டிசம்பர் 14 ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த விலையில் 1.80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 72.20 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.