நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

0
295
100 day salary for employees through banks!! Icourt sensational information!
100 day salary for employees through banks!! Icourt sensational information!

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

வங்கிகளின் மூலமாகவே நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக 2005-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டு அதற்க்கான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்” என்ற பணி ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாருகாபுரதைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.அதில் தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அவருடைய 90 நாட்கள்  பணி நாட்களையும் கடந்து கடந்த 7 மாதங்களாக பணியில் தொடர்ந்து உள்ளார்.

நூறுநாள் பணியாளர்கள் அரசு நில வேலையை விட்டு தனிநபர் விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதொடு கிராம ஊராட்சி வேலையும் பாதிக்கப்பபடுகிறது.எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு நூறு நாள் வேலை திட்டத்தினை சரியான முறையில் செயல் படுத்துமாறும் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார், ஆகியோர் முன்பு வந்தது.

அடுத்து ஆஜரான அரசாங்க பிளீடர் திலக் குமார், கிராம ஊராட்சி நூறு நாள் பணியாளர்களின் ஆதார் விவரங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்குரிய ஊதியம் நேரிடையாக வழங்கப்படாமல் வங்கி மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதோடு பணிகளை முறையாக மேற்கொள்வதற்க்கான நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய நீதிபதிகள் தனியார் நிலத்தில் பணியாளர்கள் வேலை செய்ததற்க்கான புகைப்பட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி திட்ட வேலைகள் முறையாக நடக்கிறதா?? என்பது தொடர்பான சந்தேகம் எழுகிறது.எனவே இந்த வழக்கு தொடர்பான முறையான விவரங்களை ஊரக வளர்ச்சித் துறை செயலர் சார்பில் அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கை           ஜன-4 விசாரணைக்கு தள்ளி வைத்தார்.