தங்கம் விலை சற்று உயர்வு!! இன்றைய விலை நிலவரம்!!

Photo of author

By Sakthi

தங்கம் விலை சற்று உயர்வு!! இன்றைய விலை நிலவரம்!!

Sakthi

Today, gold is selling at Rs 56,800 a barToday, gold is selling at Rs 56,800 a bar

gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த ஆண்டு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. குறிப்பாக  அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரம் உச்சம் பெற்றது. தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தார்கள். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.  இந்த நிலையில்  நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது.

அதன் பிறகு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக  விற்பனையானது. இந்த நிலையில்   டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு கிராமுக்கு ரூ,30 குறைந்தது.

எனவே  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 அன்று  சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கும், ஒரு சவரன் தங்கம்  ரூ.56,800க்கு விற்பனையாகிறது. நேற்று, டிசம்பர் 24 தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து  ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று டிசம்பர்-25 தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.56,800க்கும் விற்பனையாகி வருகிறது.வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கு, ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.99,000க்கு விற்பனையாகிறது.