எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

Photo of author

By Kowsalya

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

நாள் : 01.08.2020

தமிழ் மாதம்: ஆடி 17 சனிக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை.

ராகு காலம்: 

10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்:

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

திதி:

தியோதசி திதி இரவு 9.55 வரை அதன் பின் சதுர்தசி திதி.

நட்சத்திரம்:

மூலம் காலை 6.48 மணி வரை அதன் பின் பூராடம்.

இன்றைய நாள் சித்த யோகம் காணப்படும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று சனி பிரதோஷம். இன்று சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சுபமான நாள். உத்தியோகம் சம்பந்தமாக உங்களுக்கு வரவு கிடைக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. புதிய பொருட்களை வாங்கும் மோகம் அதிகரிக்கும். சகோதர சகோதரி வகையில் அனுகூலம் அமையும். தடைபட்ட பாக்கிகள் வந்து சேரும். சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருங்கள் நல்ல வழி கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வரும் . பெரியவர்கள் இன்று உங்களை திட்டுவார்கள். யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்துடன் இயற்றி செய்வீர்கள். புதிய பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.நீங்கள் புதிய தொழில்களைத் தொடங்க இன்று நல்ல நாளாக அமையும். தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் நாள். உறவினர்களால் ஆதாயம் கிட்டும்.வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் நல்லபடியாக அமையும். பிள்ளைகளுக்கு விரும்பியதை வாங்கித்தந்து மகிழ்வீர்கள். பண வரவு அதிகமாகும். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களது வியாபாரத்தில் உங்களுடன் இருக்கும் நண்பர்களால் பிரச்சனை ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி மறையும். சிக்கனமாக செலவழியுங்கள்.ஒரு காரியத்தை செய்யும் பொழுது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுங்கள். சொத்துக்கள் சம்பந்தமாக விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு கூடப் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகளால் கஷ்டம் உண்டாகும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.உங்கள் பிரச்சனைகளுக்கு உங்களது உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.இதுவரை வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.வியாபாரிகளே உங்களது தொழிலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விநாயகரே வழிபடுங்கள். குழப்பமான நாள்.

துலாம்:

துலா ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு கிட்டும்.குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.தொழில் விஷயம் சம்பந்தமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.உங்களது உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சுபநிகழ்ச்சியை தேடிக் கொண்டு வந்து தருவார். கடன் சுமை குறையும். வேலை தேடும் நபர்களுக்கு வேலை அளியுங்கள். பயன்படுத்திக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களது உடல்நிலை ஆரோக்கியம் பெறும். சுபச்செலவுகள் தேடி வரும். கேட்ட இடத்தில் இருந்து கடன் தருவார். புதிய பொருள் வீடு வந்து சேரும். தொழிலில் பணவரவு வரும். கடன் பிரச்சினைகள் தீரும். சுப காரியங்களில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். நிதானமாக செயல்படுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் எளிதில் முடிக்கும் திறன் கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் வரும். உற்சாகமாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களைப் பார்த்துப் பேசி மகிழ்வீர்கள். புதிய பொருட்கள் சேரும்.மருத்துவ ரீதியாக சிறுசிறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று எதை செய்தாலும் நிதானமாக செய்யுங்கள். கேட்ட உதவிகள் கை வந்து சேர தாமதமாகும்.வியாபாரத்தில் உடனிருக்கும் பங்குதாரர்களுடன் நட்பு போராட்டங்கள் மூலம் கிடைக்கும்.சுபகாரியங்களில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது .ஏற்றம் தரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும்.. ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்களால் மகிழ்ச்சி வரும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல நாள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வண்டி வாகனம் இன்று உங்களுக்கு செலவு வைக்கும். செலவைக் கட்டுப்படுத்தும் நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே பிள்ளைகள் மூலம் உங்களுக்கு செலவுகள் உண்டாகும். மன நிம்மதி சற்று குறைய வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தமாக செயல்படும்போது சிந்தியுங்கள் இது உங்களுக்கு நல்லது. உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டி மகிழுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்கள் படிப்படியாக குறையும் நாள்.