தினசரி ராசிபலன் – 21.08.2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 21-08-2020

நாள் : 21-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 5, வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மதியம் 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை.

எம கண்டம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

குளிகன்: 

காலை 7.30 முதல் 9.00 வரை,

திதி: 

திரிதியை திதி இரவு 11.03 வரை பின் வளர்பிறை சதுர்த்தி ஆகும்.

நட்சத்திரம்: 

உத்திரம் நட்சத்திரம் இரவு 09.29 வரை பின் அஸ்தம்.

சித்தயோகம் இரவு 09.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது ஆகும். இன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இன்று சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வீண்செலவுகளால் சஞ்சலம் ஏற்படும்.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவி கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களில் பதற்றம் தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை அமையும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.பழைய பாக்கிகள் வசூலாகும். உற்சாகமான நாள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் மறைமுக ஆதாயம் ஏற்படும்.