இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

Kowsalya

இன்றைய ராசி பலன்- 31-08-2020

நாள் : 31-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 15, திங்கட்கிழமை,

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

காலை 7.30 முதல் 9.00 வரை.

எம கண்டம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை,

திதி:

திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி

நட்சத்திரம்:

திருவோணம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு அவிட்டம்.

அமிர்தயோகம் பகல் 03.04 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஓணம் பண்டிகை. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். ஹயக்ரீவர்- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப்பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சினை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.